ஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..! 🐪🐪🐪......(camel)
.*.நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (அல்குர்ஆன் : 16:66) ஒட்டகம் தனக்குத் தேவையான தண்ணீரையும் சேமித்துக் கொள்கிறது….
மத்ஹபுகள் பற்றி நாம் அறியவேண்டிய விஷயம்
*.ஷாஃபியீ,*..ஹனஃபீ, *..மாலிகீ, *..ஹம்பலீ ஆகிய நான்கு மத்ஹபுகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுவது யாவரும் அறிந்ததே! எனினும் இன்று மத்ஹபுகள் தேவையில்லை. இமாம்களை பின்பற்றக்கூடாது., என்று ஒரு பிரிவினர் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்கள்
1. தவ்ஹீத் ஜமாஅத்,
2.நஜாத் காரர்கள்,
3.கைரு முகல்லிதீன்கள்,
4.அஹ்லெ ஹதீஸ்,
5.ஜம்யிய்த்து அஹ்லில்.
6.குர்ஆன் வல்ஹதீஸ் போன்ற பெயர்களால் அறியப்படுகின்றனர்.இது போன்ற ஏராளமானகுழப்பவாதிகள் உள்ளனர்.
குர்ஆன் ஹதீஸைத் தான் பின்பற்ற வேண்டும், என்ற நல்ல வாசகத்தைக் கூறி மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். *.மத்ஹபுகள் என்றால் என்ன?
*.இமாம்களைப் பின்பற்றுவது என்றால் என்ன? என்பதை நாம் அறியாமல் இருப்பதால் தான் இது போன்ற குழப்பவாதிகள் மக்களை மிக எளிதாக வழிகெடுத்து விடுகின்றனர். அவர்கள் மத்ஹபுகள் பற்றி மக்களிடம் செய்யும் பிரச்சாரம் முற்றிலும் தவறானது. ஏதாவது ஒரு ஃபிக்ஹ் (சட்ட) நூலில் கூறப்பட்டுள்ளவற்றைப் பார்த்து கண்மூடித்தனமாக நாம் பின்பற்றுவதைப் போல் இவர்கள் பேசித்திரிகிறார்கள்.
*....இன்று தோன்றியுள்ள மார்க்கப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமே மத்ஹபுச் சட்டங்கள்தான். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களைப் போதிக்கும் மத்ஹபுகள் எமது நாட்டில் மாத்திரமல்லாது உலக நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இந்த மத்ஹபு மாயையில் சிக்கியுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அதன் விபரீதம் புரியாமல் தமது வணக்க வழிபாடுகளில் மத்ஹபுச் சட்டங்களையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.
இம் மத்ஹபுகளே அநேக அரபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்து போதிக்கப்படுகின்றது. அனைத்து வழிகெட்ட கொள்கைகளும், அனாச்சாரங்களும், பித்அத்துக்களும்
தோன்ற அடிப்படைக் காரனமாக அமைகின்றது.
தக்லீத் :
இமாம்களைப் பின்பற்றுதல் என்றால் என்ன? *.இதை பற்றி தெரிவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலம் முதற்கொண்டு ஒவ்வொரு காலத்திலும் மார்க்கத்தின் படி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு எம்மாதிரியான திட்டத்தின் படி செயல்பட்டார்கள்? போன்ற சில அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்வோம்.
தக்லீத் எப்பொழுது அவசியமாகிறது?:
*.அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது என்பதே இஸ்லாத்தின் முதலிடமும் முக்கியத்துவம் பெற்ற அடிப்படைக் கொள்கை. அல்லாஹ்வின் கட்டளைகளை மக்கள் அறிந்து கொண்டு அவனுடைய பொருத்தத்தைத் தேடித்தரும் காரியங்களை ஏற்று கோபமூட்டும் காரியங்களை விட்டும் விலகி நடப்பதற்காகவே நபிமார்கள் அனுப்பப் படுகிறார்கள். அவர்களில் கடைசியாக வந்த இறைத்தூதர் நம் உயிரினும் மேலான முஹம்மதுர் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள்ஆவார்கள். குர்ஆன் சுன்னாவை பின்பற்றித் தான் வாழ வேண்டும். அவ்விரண்டையும் புறக்கணித்து விட்டு (அல்லாஹ், ரஸுல் நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லாதவற்றை) மற்ற எதையுமோ யாரையுமோ அவர் அதை சுய இஷ்டப்படி சொல்கிறார், என்ற அடிப்படையில் பின்பற்றினால் அவர் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டும் வெளியேறி விடுவார், என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அல்லாஹ் ஒருவன், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவது, சுவர்க்கம் நரகம் போன்றஇஸ்லாமியக் கொள்கைகனை தெளிவாகவே குர்ஆன் விளக்கி வைக்கிறது. தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற சட்டங்கள் குர்ஆனில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. இவற்றில் எந்த இமாமையும் தக்லீத் செய்யத் தேவையில்லை. இமாம்களைப் பின்பற்றுவது என்றால் குர்ஆனையும் ஹதீஸையும் விட்டு விட்டு எல்லா விஷயத்திலும் இமாம்களை தக்லீத் செய்வது போன்ற மாயையை அசத்தியவாதிகள் ஏற்படுத்தயுள்ளனர்.
தொழுகைகளின் ரக்அத்களின் எண்ணிக்கை தொழுகைக்கு உளூ கட்டாயம், ஒவ்வொரு தொழுகைக்கும் அதற்காக குறிப்பிடப்பட்ட நேரம் உள்ளது, கஃபாவை முன்னோக்குவது, தங்கம் வெள்ளியில் ஜகாத் கடமை, ஸஹர் முடிந்த நேரத்திலிருந்து சூரியன் மறைவு வரை தான் நோன்பின் நேரம், வேண்டுமென்றே சாப்பிட்டாலோ குடித்தாலோ நோன்பு முறிவது ரமளான் மாதத்தில் தான் நோன்பு கடமை மக்காவுக்குச் சென்று தான் ஹஜ் செய்ய வேண்டும், துல்ஹஜ் மாதத்தில் தான் ஹஜ் செய்ய வேண்டும், ஸஃபா மர்வாவுக்கு மத்தியில் தான் ஸயீ செய்ய வேண்டும், பெண்கள் மாதவிடாய் காலத்தில தொழவோ நோன்பு வைக்கவோ கூடாது, வியாபாரம் ஹலால், வட்டி ஹராம், விபச்சாரம் ஹராம், பொய், புறம், இட்டுக்கட்டுதல் போன்றவை கூடாது, சாராயமும் சூதாட்டமும் ஹராம் போன்ற சட்டங்களில் யாரும் எந்த இமாமையும் பின்பற்றத் தேவியில்லை.
ஆதாரங்கள் :
وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا
(سورة البقرة / آية 143.)
நீங்கள் மக்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும், நபியவர்கள் உங்களுக்கு சாட்சியாக இருப்பதற்காகவும் இவ்வாறு உங்களை நாம் நடுநிலை உம்மதாக ஆக்கினோம்
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு (ஆட்சியராக) அனுப்பிய போது உங்களிடம் ஏதாவது பிரச்சினைக்கு தீர்வு கேட்கப்பட்டால் எப்படி தீர்வு செய்வீர்கள்?, என்று கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு என்றார்கள்.
நபி (ஸல்): அதில் அதற்கான தீர்வு கிடைக்க வில்லையானால் என்ன செய்வீர்கள்?
முஆத் (ரலி): அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டல்படி.
நபி(ஸல்): அதிலும் தீர்வு கிடைக்க வில்லையானால்?
முஆத்(ரலி): அப்பொழுது என்னுடைய சிந்தனை சக்தியின் மூலம் (குர்ஆன், சுன்னா உதவியுடன்) இஜ்திஹாத் - ஆய்வு செய்வேன். அதில் எக்குறைவும் செய்யமாட்டேன். அப்பொழுது நபியவர்கள் முஆதின் இதயத்தைத் தட்டி, அல்லாஹ்வின் தூதர் விரும்பும் விதத்தில் ரஸுலுல்லாஹ்வின் தூதருக்கு தௌஃபீக் செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், என்று கூறினார்கள். (திர்மிதீ)....
நான்கு இமாம்கள்:
1. இமாம் அபூஹனீஃபா (ரஹ்)
பிறப்பு - ஹிஜ்ரி 80; இறப்பு - 150
2. இமாம் மாலிக் (ரஹ்)
பிறப்பு - ஹிஜ்ரி 93; இறப்பு - 179
3. இமாம் ஷாஃபியீ (ரஹ்)
பிறப்பு - ஹிஜ்ரி 150; இறப்பு - 204
4. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்)
……………பிறப்பு - ஹிஜ்ரி 164; இறப்பு - 241.
இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்)
هو أبو عبد الله مالك بن أنس بن مالك بن أبي عامر الأصبحي الحميري المدني. (93-179هـ / 711-795م) فقيه ومحدِّث مسلم، وثاني الأئمة الأربعة عند أهل السنة والجماعة، وصاحب المذهب المالكي في الفقه الإسلامي.
*.நமது முஸ்லிம் உம்மத்தில் தோன்றிய மாபெரும் மார்க்க அறிஞர்களில் முக்கியமானவர். இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள். நான்கு பெரும் இமாம்களில் காலவரிசைப்படி இரண்டாவது நபர் இமாம் ஆவார்கள்…….
மேலும்……..இமாம் அவர்கள் பற்றிய சிறு குறிப்புகளை பார்க்கலாம்….الحمدلله….🤲🏻.
பிறப்பு :
*.மாலிக் பின் அன்ஸ் பின் மாலிக் பின் அபீ ஆமிர் அல் அஸ்புஹீ .
*.புணைப் பெயர்: ابو عبدالله
*.சிறப்பு பெயர்: ஷைகுல் இஸ்லாம் இமாமு தாரில் ஹிஜ்ரா. ( ஹிஜ்ரத் நகரின் -மதீனாவின் இமாம்).
*.நபித்தோழர் வழி வந்த அறிவுப் பாரம்பரியமிக்க குடும்பத்தில் புனித மதீனாவில் ஹிஜ்ரி/ 93ல் கி.பி. 711ல் (93-179هـ ) பிறந்தார்கள்.
*.அதாவது நபி (ஸல்) அவர்களின் பத்துவருட பணியாளரான அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் மரணித்த தினம் மாலிக் பிறந்த நாளாகும்.
*.குலம்:
இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை பெயர் அனஸ் பின் மாலிக்.
*.பரம்பரை விஷயத்தில்:
*. “இமாம் மாலிக் அவர்களின் பாட்டனார் அனஸ் அவர்கள் மூத்த தாபிஈன்களில் ஒருவராகவும் மார்க்க அறிஞராகவும் திகழ்ந்தார்.”. இமாம் அவர்களின் முப்பாட்டனார் அபூ ஆமிர் அவர்கள் நபித்தோழர் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். சிலர் நபித்தோழர் அல்ல என்கின்றனர். இமாம் அவர்களின் மூதாதையர் எமன் தேசத்தைச் சேர்ந்தவர்கள், இமாமவர்களின் முப்பாட்டனார் நபியின் காலத்திலேயே மதீனா நகருக்கு வந்துவிட்டார் என்பதற்கு உறுதியான பதிவில்லை. அதனாலேயே இவ்வாறு இருவிதமாக கூறப்பட்டுள்ளது.
சரியானது என்னவென்றால்:
دار الحجرة.*
ஹிஜ்ரத் செய்து வந்ததால் மதினா வாசியாக மாறினார்கள்
*.கல்வித்தேடல்:
*. இமாம் மாலிக் அவர்கள் சிறு பிராயத்திலேயே திருக்குர்ஆனை மனனம் செய்து விட்டார்கள். பின்பு மதீனாவின் பிரபல அறிஞர்களாக இருந்த ரபிஆ, இப்னு ஹுர்முஸ் ஆகியோரிடம் ஆரம்பமாக பல ஆண்டுகள் ஹதீஸ் உள்ளிட்ட மார்க்க கல்வியை கற்றார்கள். பின்னர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் பணியாளராக இருந்து ஹதீஸ்களை கற்று பின்னர் ஹதீஸ் அறிஞராகத் திகழ்ந்த நாஃபிஉ அவர்களிடம் ஹதீஸ்களை கற்றார்கள்.
*. அதேபோல் ஆரம்பகால ஹதீஸ் தொகுப்புகளை உருவாக்கிய ஹதீஸ் கல்வியின் மிகப்பெரிய அறிஞரான இமாம் ஸுஹ்ரி(ரஹ்) அவர்களிடமும் ஹதீஸ் மற்றும் மார்க்கக் கல்வி கற்றார்கள்.
*.இமாம் அவர்கள் இளமைப் பிராயத்திலிருந்தேஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் பொன்மொழிகளை கேட்பதிலும் அவற்றை பதிவு செய்வதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்தார்கள். அல்லாஹ் தஆலா அவர்களுக்கு ஹதீஸ் கல்வியையும் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் தகுதியையும் வழங்கி சிறப்பித்தான்.
கல்விப் பணி:
*.அக்காலத்தில் மதீனாவில் இருந்த பெரியோர்களின் ஆலோசனைப்படி இமாம் அவர்கள் ஆசிரியராக அமர்ந்து கல்விப் பணி செய்ய மஸ்ஜிதுன் நபவியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் உமர்(ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் ஆலோசனை செய்வதற்காகவும் தீர்ப்புகள் வழங்குவதற்காகவும் அமர்ந்திருந்த இடம் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
*. இமாம் அவர்களின் கல்வி சபை கம்பீரமும் அமைதியும் நிலவக்கூடியதாக இருக்கும். வீண் பேச்சுகள் என்பது அறவே இருக்காது. கல்வி கற்கும் மாணவர்கள் இந்நிலையில்தான் கற்க வேண்டும் என்றும் கூறுவார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஸை கற்பிக்கும் போது முழுமையான தூய்மையுடனும், தூய்மையான ஆடை அணிந்தும், நறுமணத்துடனும் இருக்கும் நடைமுறையை கடைப்பிடித்தார்கள்.
*.இவ்வாறு அல்லாஹ்வின் தூதருடைய மஸ்ஜிதில் அமர்ந்து பல்லாண்டு காலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு மார்க்கக் கல்வியை போதித்து கொண்டிருந்தார்கள்.
*...இமாம் மாலிக் (ரஹி) அவர்கள் அறிவுத் தேடலில் சுசுறுப்பானவராகவும் அபார முயற்சியாளராகவும் சிறந்த அடைவுகளை அடைபவராகவும் காணப்பட்டார்கள்.
*.அவர்கள் தனது சிறு பராயத்திலேயே சங்கைமிக்க குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த ஹாஃபிழாக விளங்கியதன் விளைவாக மதீனா மஸ்ஜித் நபவியில் நடை பெறும் அறிவு மஜ்லிஸுகளில் கலந்து எழுதிப்படிக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
*.அங்கு சென்று தொடர்ந்தும் இறைத் தூதரின் பொன்மொழிகளை மனனம் செய்ய ஆரம்பித்தார்கள்.
فقيه المدينة மதீனாவின் மார்க்க மாமேதை
என்றழைக்கப்படும் இமாம் ஹுர்முஸ் என்ற அறிஞரிடம் ஏழு வருடங்கள் தொடராக கல்வி கற்றுத் தேறினார்கள் என வரலாறு குறிப்பிடுகின்றது.
فقيه ومحدِّث ஃபகீஹ், முஹத்திஸ் என்ற இரு பெரிய சிறப்புப் பெயர்களோடு அறியப்பட்ட இமாம் மாலிக் (ரஹி) அவர்கள் முதன் முதலில் ஹதீஸ் நூலைத் தொகுத்தளித்தவர் எனப் போற்றப்பட்டுகின்றார்கள்.
ஆசிரியர்கள்:
*.தாஃபியீன்களில் ஒரு பெரும் கூட்டம் இவருக்கு ஆசிரியராக இருந்தது.
*.நாஃபிஃ,
*.ஹிஷாம் பின் உர்வா,
*.யஹ்யா பின் சயீத்,
*.அப்துல்லாஹ் பின் தீனார்,
*.சைத் பின் அஸ்லம்,
*.முஹம்மத் பின் முஸ்லிம்,
*.அப்துல்லாஹ் பின் அபீபக்கர்,
*.சயீத் பின் அபீ,
*. இப்னு சிஹாப் (ரலியல்லாஹூ அன்ஹூம்) ஆகியோர் இவருடைய ஆசிரியர்கள்.
மாணவர்கள்:
*.சுஃப்யான் சவ்ரீ,
*.அல்லைஸ் பின் சஃத்,
*.ஷுஃபா,
*.அப்துல் மலிக்,
*.மஃமர் பின் ராஷித்,
*.யஹ்யா பின் சயீத்,
*. இப்னுல் முபாரக்,
*.வகீஃ மற்றும் இமாம் ஷாபி ஆகியோர் இவருடைய மாணவர்கள்.
(ரலியல்லாஹு அன்ஹு)
பிள்ளைகள்:
இமாம் மாலிக் அவர்களுக்கு :
1.யஹ்யா,
2.முஹம்மத்,
3.ஹம்மாத்,
4.ஃபாத்திமா. ஆகிய நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
இமாம் அவர்களின் உயர் தன்மைகள்
*.இமாம் அவர்களின் அதி சிரேஷ்ட மாணவரான இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்கள் குறிப்பிடுகின்ற போது:
"مالك سيد من سادات أهل العلم، وهو إمام في الحديث والفقه، ومن مثل مالك؟ متبع لآثار من مضى، مع عقل وأدب "
அறிவுள்ள தலைவர்களில் இமாம் மாலிகும் ஒரு தலைவர். அவர் ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் ஆகிய இருதுறைகளின் இமாமும் கூட. கூடவே, آثار ஆதார் எனப்படும் நபி வழிச் சான்றுகளைப் பின்பற்றி நடப்பவர்களான ஸஹாபாக்கள் வழியில் நடப்பவர்
, ஒழுக்கமாகவும் , புத்தி சாதுரியத்தோடும் நடப்பவர் எனக் குறிப்பிடுகின்றார்கள். (இமாம் ஷாஃபிஈ).
*..இமாம் மாலிக் அவர்கள் பலமான மனன சக்தி கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். நபியின் பல ஹதீஸ்களை ஆசிரியரிடம் ஒரு தடவை கேட்டு விட்டு, கேட்ட ஹதீஸ்களை எல்லாம் சரளமாக திருப்பிச் சொல்கிற ஆற்றல் கொண்டவராக இருந்தார்கள்.
*.....இமாம் அவர்கள் மிகப் பெரிய பொறுமைசாலியாகவும் கம்பீரம் உடையவர்களாகவும் இருந்தார்கள். அத்துடன் அவர்களை காணும் யாரும் அவர்களை அச்சம் கலந்த மரியாதையுடன் பார்க்கும் நிலையில் இருந்தார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களும் ஆட்சியாளர்களும் கூட இமாம் அவர்களை இவ்வாறுதான் அணுகினார்கள் என்று சரித்திரப் பதிவுகள் கூறுகின்றன.
*.”இமாம் மாலிக் தனது பக்தி மற்றும் நேர்மைக்காக பிரபலமானார், மேலும் தைரியமாக தனது நம்பிக்கைக்காக துன்பப்படுவதற்கு தயாராக இருந்தார்”.
எடுத்துக்காட்டாக,
*.ஹிஜ்ரி 135 இல், கலீஃபா அல்-மன்சூருக்கு ஆதரவாக விசுவாசப் பிரமாணம் செய்யுமாறு மதீனாவின் கவர்னர் மக்களைக் கோரியபோதும், கட்டாயப்படுத்தியபோதும், இமாம் அத்தகைய உறுதிமொழி கட்டாயம் இல்லை, ஏனெனில் அது கட்டாயப்படுத்தப்பட்டது.
*.இந்த ஃபத்வா ஆட்சியாளரின் நலனுக்காக இல்லாததால், கவர்னர் இமாமைக் கைது செய்து, "குற்றத்திற்காக" பகிரங்கமாக கசையடியால் அடித்தார்.
இந்த சீற்றத்தை அறிந்த அல்-மன்சூர், இமாமிடம் மன்னிப்புக் கேட்டு, தவறு செய்த ஆளுநரை பதவி நீக்கம் செய்தார்.
இமாம் மாலிகின் அறிவுப் பணி:
*.ஹிஜ்ரா நகர இமாம் என்ற சிறப்புப் பெயருக்குரிய இமாம் மாலிக் (ரஹி) அவர்களிடம்
ஹஜ்ஜுக்காகச் சென்று வருகின்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களின் அறிவில் இருந்து நிறையவே பயன் பெற்றதுடன், தமது பிரதேசங்களுக்கும் அதனைச் சுமந்து சென்றனர்.
*.உலகில் நாலா பக்களில் இருந்தும் பல நூறு மாணவர்கள் இமாம் மாலிக்கின் அறிவு மஜ்லிஸையும் மார்க்க தீர்வையும் தேடிப் பெற புறப்பட்டு வருகை தந்ததன் விளைவாக இமாம் அவர்களின் பெயரும் புகழும் உலகெங்கும் பரவியது.
நூல்:
1….முஅத்தா இமாம் மாலிக்.
2….முஅத்தா அல் குப்ரா
முவத்தா கோர்வை செய்யப்பட்டது பற்றிய கதை:
*.அப்பாஸிய கலீஃபா அபூ ஜஃபர் அல்மன்சூர் அவர்கள் ஹஜ் செய்ய வந்த போது இமாம் மாலிகின் பாட விரிவுரைகள் பற்றி செவிமடுத்த பின்னர், மக்களுக்கு இலகுவாக விளங்கும் அமைப்பில் நபியின் மொழிப் பேழை ஒன்றை தொகுத்தால் நன்றாக இருக்கும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியதன் பயனாக இமாம் மாலிக் தனது முவத்தாவைக் கோர்வை செய்ததாக கூறப்படும் செய்தி
والله أعلم எந்த அளவு ஆதாரபூர்வமானது என்பது தெரியாது
மரணம்:
*.இஸ்லாமிய உலகில் பல நூறு மாணவர்களை உருவாக்கி இஸ்லாமிய அறிவுச் சுடரேற்றி பல சாதனைகள் புரிந்த இமாம் அவர்கள் ஹிஜ்ரி 179 ல் கி.பி. (795 ல்) தனது 86வது வயதில் 20 தினங்கள் தொடராக நொய்வாய்ப்பட்ட நிலையில் மதீனாவிலேயே மரணித்தார்கள்.
رحمه الله رحمة واسعة وأسكنه الفردوس الأعلى.
அவன்னாரின் ஜனாஸா தொழுகையை அப்போதைய மதீனாவின் கவர்னராக இருந்த அப்துல்லாஹ் பின்
முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவரால் தொழுவிக்கப்பட்டு மதீனா பகீஃ பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது ..
Bee…தேனி…نحل
பழங்கால எகிப்தியர்களின் பெரும்பாலான மருந்து வகைகளில் தேன் முக்கிய இடத்தைப் பெற்றது. தற்போது யுனானி மருந்துகள் பெரும்பாலும் தேனை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
தேனீக்கள் ஆறு கால்கள் கொண்ட சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாகச் சேர்த்து வைக்கின்றன. தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவை ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாகும். ஒரு சொட்டு தேனைச் சேர்க்க தேனீ சில சமயம் 16 மைல் தூரம் வரை பறந்து செல்லுமாம். ஒரு கிலோ எடை கொண்ட தேன் சேகரிக்க தேனீக்கள் 6 லட்சத்து 68 ஆயிரம் பூக்களைச் சந்திக்கின்றன. ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டு வர ஒரு தேனீ சுமார் 45 ஆயிரம் மைல் தூரம் அலை போல அலைய வேண்டும்.
தேனீக்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் என்ன கூறுகின்றான்.
وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ﴾ النحل: 68, ﴿ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ﴾ النحل: 69
தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்.
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), “பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது; அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69
இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.
உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.
இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.
பொறுப்பு
பொறுப்பு – ஓர் அமானிதம் :
*.அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! *.இந்தப் பொறுப்புகள் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அனைவரும், நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்ற பொறுப்பை இறைவனின் புறத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கின்ற அமானிதம், சோதனை, இறைக்கட்டளை என்றே நம்பக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
*.பொதுவாகவே, ஒருவருக்கு கிடைக்கின்ற பொறுப்பு,பதவி, அந்தஸ்து, அதிகாரம் இவைகளெல்லாம் நம்முடைய அறிவினாலோ, ஆற்றலினாலோ, திறமையினாலோ நமக்குக் கிடைக்கப் பெற்றிருக்கின்றது என்று ஒருவன் நம்பினால் அவனை விட மிகப்பெரிய அறிவிலி யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
மாறாக, நமக்குக் கிடைக்கின்றபொறுப்பாக இருந்தாலும், அந்தஸ்தாக இருந்தாலும், அதிகாரமாக இருந்தாலும், மக்களை நிர்வகிக்கின்ற எந்தப் பொறுப்பாக இருந்தாலும் இறைவனின் தனிப்பெரும் கிருபையினால் நமக்குக் கிடைத்திருக்கின்றது; எத்தனையோ அறிவிற்சிறந்தவர்கள், பட்டம் படித்தவர்கள், பணக்காரர்கள் இருந்தாலும் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு நம்மை இறைவன் தேர்ந்தெடுத்து இந்தப் பதவியைக் கொடுத்திருக்கின்றான்.
1.*.பொறுப்பு எனும் அமானிதத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
قَالَ أَبَا ذَرٍّ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَلَا تَسْتَعْمِلُنِي؟ قَالَ: فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِي، ثُمَّ قَالَ: «يَا أَبَا ذَرٍّ، إِنَّكَ ضَعِيفٌ، وَإِنَّهَا أَمَانَةُ، وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْيٌ وَنَدَامَةٌ، إِلَّا مَنْ أَخَذَهَا بِحَقِّهَا، وَأَدَّى الَّذِي عَلَيْهِ فِيهَا.
பொருள்: “ அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?’’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்துவிட்டு, ‘‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம்.
யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்’’ என்று கூறினார்கள்.
நூல்: புகாரி-3729
2. ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَرَجُلاَنِ مِنْ قَوْمِي، فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ: أَمِّرْنَا يَا رَسُولَ اللَّهِ، وَقَالَ الآخَرُ مِثْلَهُ، فَقَالَ: «إِنَّا لاَ نُوَلِّي هَذَا مَنْ سَأَلَهُ، وَلاَ مَنْ حَرَصَ عَلَيْهِ
பொருள்:*.நானும் என் சமூகத்தாரில் இரண்டு பேரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பொறுப்பை) வழங்கமாட்டோம்’’ என்று சொன்னார்கள்.
ஆதாரம்: புகாரி-7149
3.பேணத் தவறினால் சொர்க்கம் ஹராம்:*.பொதுமக்களின் பொறுப்பு வழங்கப்பெற்ற ஒருவர் மக்கள் நலன் காக்கத் தவறினால் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான் என்று பதவிவெறி பிடித்து, பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாத நபர்களைப் பற்றி எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ
عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ عَبْدٍ اسْتَرْعَاهُ اللَّهُ رَعِيَّةً، فَلَمْ يَحُطْهَا بِنَصِيحَةٍ، إِلَّا لَمْ يَجِدْ رَائِحَةَ الجَنَّةِ
பொருள்:*.மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள், இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்னாரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்’’ எனக் கூறினார்கள்.
ஆதாரம்:புகாரி-7150.
4.மக்களை நிர்வகிக்கும் அதிகாரப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒருவர் மக்களுக்கு மோசடி செய்தாலோ, மக்களை ஏமாற்றினாலோ அந்தப் பொறுப்பாளிகளுக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விடுவான் என்ற கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கின்றார்கள்.
: عَنِ الحَسَنِ، قَالَ
أَتَيْنَا مَعْقِلَ بْنَ يَسَارٍ نَعُودُهُ، فَدَخَلَ عَلَيْنَا عُبَيْدُ اللَّهِ، فَقَالَ لَهُ مَعْقِلٌ: أُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنَ المُسْلِمِينَ، فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ، إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الجَنَّةَ
பொருள்:*.நாங்கள் மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்:
“முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி-7151
5.வது:
مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ، ثُمَّ لَا يَجْهَدُ لَهُمْ
وَيَنْصَحُ، إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمُ الْجَنَّةَ
பொருள்:*.
“ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்துக்குச் செல்லவே மாட்டார்’’ என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்-3735.
6.மக்களில் சிறந்தவர்கள்:
*.பதவி, அதிகார விஷயத்தில் மக்களின் பார்வையில் ஏராளமானோர் சிறந்தவர்களாகத் தெரியலாம். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் மக்களில் சிறந்தவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணிக்கின்றார்கள்.
تَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ فِي هَذَا الشَّأْنِ أَشَدَّهُمْ لَهُ كَرَاهِيَةً حَتَّى يَقَعَ فِيهِ
பொருள்:*.
“இந்த தலைமைப் பதவி விஷயத்தில் தாமாக விழும்வரை அதில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களையே நீங்கள் மக்களில் சிறந்தவர்களாகக் காண்பீர்கள்’’ என்று கூறப்படுகிறது.
ஆதாரம்: முஸ்லிம்-4945
விளக்கம்:*.தலைமைப் பொறுப்பு, தானாகத் தன்னுடைய தலைக்கு மேலே விழுந்தாலே தவிர, தலைமைப் பொறுப்பைக் கண்டு விரண்டு ஓடுபவர்களும், தலைமைப் பொறுப்புகள் விஷயத்தில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களும் தான் மக்களில் சிறந்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சான்று பகர்கின்றார்கள்.
7.சமுதாய விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவருக்கு சிறப்புமிக்க துஆவை இறைவனிடத்தில் பிரத்தியேகமாக நபி (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். இந்தப் பிரார்த்தனைகளுக்குச் சொந்தக்காரர்களாக, பொறுப்பாளிகள் மாற முயற்சிக்க வேண்டும்!
يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللهُمَّ، مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ
பொருள்:*.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த வீட்டில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக!
என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!’’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
ஆதாரம்: முஸ்லிம்-3732
விளக்கம்:
*.பொறுப்பாளியாக இருப்பவர் மக்களுக்கு சிரமத்தையோ அல்லது சிரமம் தருகின்ற வேலையிலோ ஈடுபட்டால் அல்லாஹ்வின் அந்தப் பொறுப்பாளிகளுக்குக் கடுமையான சிரமத்தை ஏற்படுத்துவான். எனவே, மக்களிடத்தில் மென்மையான முறையில் பொறுப்புகளைக் கையாள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள்.
8.மிகவும் மோசமானவர்கள்:
மக்களின் பொறுப்பைத் தன்னகத்தே கொண்டு செயல்படுகின்ற பொறுப்பாளர்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; தீயவர்களும் இருக்கின்றார்கள். பொறுப்பாளர்களில் மிகக் கெட்டவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
حَدَّثَنَا الْحَسَنُ أَنَّ عَائِذَ بْنَ عَمْرٍو:
، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى عُبَيْدِ اللهِ بْنِ زِيَادٍ، فَقَالَ: أَيْ بُنَيَّ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ شَرَّ الرِّعَاءِ الْحُطَمَةُ، فَإِيَّاكَ أَنْ تَكُونَ مِنْهُمْ
பொருள்:*.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்-3736
விளக்கம்:
*.மக்களை நிர்வாகம் செய்பவர்கள் கல் நெஞ்சக்காரர்களாக இருக்கக் கூடாது. இளகிய மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அல்லாஹ்வை அஞ்சி மக்களை நிர்வகிக்காமல், தன்னுடைய மனம் போன போக்கிலே நிர்வாகம் செய்பவர்கள் தங்களுடைய உள்ளங்களைக் கல் நெஞ்சம் கொண்டவர்களாக மாற்றிக் கொள்வார்கள். இத்தகையவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
9.பொறுப்பாளர்களின் தனிச்சிறப்பு:
அல்லாஹ்வுக்காக நேர்மையான முறையிலும், இறையச்சத்தோடும் மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தனிச்சிறப்பை வழங்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا
பொருள்:*.
நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).
ஆதாரம்: முஸ்லிம்-3731
எனவே,அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
பொறுப்பு – ஓர் அமானிதம் :
10.வது:
حديث ابن عمر: "كلكم راع، وكلكم مسؤول عن رعيته"
பொருள்:
*.நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
விளக்கம்:
*.மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:
புஹாரி : 2554 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).
No comments:
Post a Comment